Thursday, January 13, 2005

சீமான் வரலாறுடன் ஒரு சந்திப்பு - An Invitation

சீமான் வரலாறு என்றொருவரைச் சமீபத்தில் சந்தித்தோம். 'ஐயா நலம்தானே' என்று நாம் கேட்டதுதான் தாமதம். 'நலமெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. நான் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடும் உம்மைப் போன்ற மனிதரை நினைத்தால்தான் வருத்தமாக இருக்கிறது' என்றொரு போடு போட்டார்.

'என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்? உம்மைப் பாதுகாத்து, உம் புகழைப் பல தலைமுறைகள் உணரும் வண்ணம், ஒன்றாம் வகுப்புப் பாடத்தில் ஆரம்பித்துக் குறைந்த பட்சம் பத்து வருடம் உம் பிரதாபங்களைத்தான் அனைவரும் படிக்கிறார்களே? அந்த புத்தகங்களில் தேடினால் நீர் அகப்படமாட்டீரோ?'

நமது சூடான பதிலைக் கேட்ட சீமான் வரலாறு ஒரு விரக்திப் புன்னகையை உதிர்த்தபடி, ' படித்துப் படித்துப் பாழாய் போவதை விட டு மேய்த்து ளாகி விடலாம் என்றொரு பழமொழி உண்டு. என்னைப் பாடத்தில் சேர்த்தாலும் சேர்த்தார்கள், இப்பொழுது என் பெயரைக் கேட்டாலே மாணவர் மத்தியில் வெறுப்புதான் மிஞ்சுகிறது. பொறியியல் கல்லூரியில் இடம் வாங்குவதற்குப் பிரயோஜனப்படாத ஜென்மம் என்று என்னை எள்ளி நகையாடுகிறர்கள்'

அவரைத் தேற்றும் வண்ணம், 'பாடப் புத்தகங்கள் போனால் என்ன, உம்மை ஆய்வு செய்யும் அறிஞர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள், உமக்காக வருடா வருடம் எத்தனை கூட்டங்கள், எத்தனை விழாக்கள், உம் பெயரால் வெளியிடப்படும் புத்தகங்கள்தான் எத்தனை...' , என்று நாம் மூச்சுவிடாமல் பட்டியலிட ரம்பிகையில் இடைமறித்து..

'நீர் பட்டியலிட்டதில் எதையாவது நீர் படித்ததுண்டா?' என்று ஒரே ஒரு கேள்வியைக் கேட்டு எம் வாயை அடைத்தார்.

'நான்.. வந்து.. இல்ல... படிக்க சைதான்.. நீர் எவ்வளவு பெரியவர், எவ்வளவு தொன்மையானவர், உம்மைப் பற்றி ஜாம்பவான்களெல்லாம் எழுதும் கட்டுரைகள் எல்லாம் இந்த மரமண்டையில் ஏறுமா என்ன?' என்று ஒருவாறு சமாளித்தோம்.
அப்படியானால் உமக்குப் புரியும் வகையில் யாரேனும் வரலாறை எடுத்துக் கூறினால் நீர் எம்மை அறிந்து கொள்ளத் தயாரா?' என்று பதிலுக்கு மடக்கினார் சீமான் வரலாறு. சரியென்று நாம் தலையசைத்துதான் தாமதம், ஒரு பெரிய பட்டியலைக் கொடுத்து 'இங்கெல்லாம் சென்று என்னை தரிசியுங்கள்', என்றார்.

'C++ for dummies' என்று புத்தகம் இருப்பதைப் போல 'varalaaru for dummies' என்று ஏதாவது புத்தகம் அளிப்பார் என்று நான் நினைத்திருக்கையில், சீமான் வரலாறு பல ஊர்களுக்கு நம்மைச் செல்லப் பணித்தது வியப்பையளித்தது.

'உமது பட்டியலில் ஊர்ப்பெயர் இருக்கிறதே தவிர, விலாசம் இல்லையே?' என்றோம். அதற்கு அவர் சிரித்தபடி, அந்த ஊர்களில் இருக்கும் கோயிலில் எல்லாம் என்னைக் காணலாம். கல்வெட்டாய், கட்டுமானமாய், சிற்பமாய், ஓவியமாய் நான் கோயில்களில் மலர்ந்திருக்கிறேன்', என்றார்.

'இனிப்பைக் காட்டிவிட்டீர் சரி. இனிப்பில் எது பாதுஷா, எது ஜாங்கிரி என்று நான் எப்படி உணர்வதாம்?', என்று நாமும் பதிலுக்கு மடக்கினோம்.

எமது அதிபுத்திசாலித்தனமான கேள்வியால் எரிச்சலுற்ற சீமான் வரலாறு, 'உம்மிடம் பேச எமக்குப் பொறுமையில்லை, திருச்சியில் டாக்டர். கலைக்கோவன் என்றொரு வரலாற்றாய்வாளரை, 'நாம் அனுப்பினோம்', என்று கூறிக் காணவும். அவரைக் கண்டு, கற்று, களிப்பதோடு நிற்காமல், நீர் கற்றதை உம்மைப் போன்றோர்க்குப் பரப்பவும்.' என்றார்.

அவர் பணித்த வண்ணமே, யாம் கற்றதைத் தமிழ் கூறும் இணைய நல்லுலகில் பகிர்ந்து கொள்ளும் நோக்கத்துடன் கஸ்ட் 15 2004, அன்று விதைக்கப்பட்டு, மாதமொருமுறை மலரும் இணைய இதழே www.varalaaru.com. எம்மைப் போன்ற மரமண்டைகள் எத்தனை கற்றுவிடுவார்கள்? யாம் கற்றதை மட்டும் வலையேற்றினால் அது சரித்திர சாகரத்தில் ஒரு கையளவுகூடப் பெறாது. கையால், முனைவர். இரா. கலைக்கோவன், முனைவர். மு. நளினி முதலானோரின் கட்டுரைகளும் இடம் பெறுகின்றன. வரலாறு என்பது வெல்லமென்றால், அதைக் காய்ச்சிப் பலகாரமாக்கி பாக்கெட்டில் போடும் வகையில் சுவாரஸ்யமான கதைகளுள் வடித்துக் கொடுக்கும் முயற்சியும் எம் தளத்தில் உண்டு. சரித்திர நாவல்களையும், பாடப்புத்தகங்களையும் காட்டிலும் சுவாரஸ்யமான பல தகவல்களைக் கொண்ட எமது இணையத்தளம் உமது வருகையை எதிர் நோக்கிக் காத்துக் கிடக்கிறது.

'கிளிக்குங்கள் திறக்கப்படும்'.

அது மட்டுமல்ல. ரம்பித்து று இதழ்கள் வெளிவந்துவிட்ட நிலையில், ஒரு சிறப்பிதழும் வெளியிடலாம் என்று இருக்கிறோம். எங்களை வரலாற்றின்பால் ஈர்த்த தஞ்சைப் பெரிய கோயிலையே மையமாகக் கொண்டு சிறப்பிதழ் மலர இருக்கின்றது. அதைத் தஞ்சையில் வரும் ஜனவரி 30ம் தேதி டாக்டர். மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் நடத்தும் டாக்டர். கூ. இரா. சீனிவாசன் அறக்கட்டளைச் சொற்பொழிவுடனும் டாக்டர். இரா. கலைக்கோவன் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவுடனும் சேர்த்து முப்பெரும் விழாவாக நடத்த எண்ணியுள்ளோம்.

நாள் : 30 ஜனவரி 2005.

இடம் : தொல்லியல் பரப்பாய்வுத் துறையின் புதிய அலுவலக வளாகம், தஞ்சை பெரிய கோயில்.

10:00 தமிழ்த்தாய் வாழ்த்து இரா. இலலிதாம்பாள் மா. இலாவண்யா
10:05 வரவேற்புரை சு. கிருபாஷங்கர்

10:30 பெண் தெய்வ வழிபாடு தோற்றமும் வளர்ச்சியும் - புத்தக வெளியீடு
வெளியிடுபவர் தியாக. சத்தியமூர்த்தி
முதல் பிரதி பெறுபவர்கள் சுந்தர் பரத்வாஜ், மரு. சு. நரேந்திரன், இரா. இலலிதாம்பாள்

10:35 வரலாறு.காம் - இராஜராஜீசுவரம் சிறப்பிதழ் வெளியீடு
இணையத்தளம் அறிமுகம் தி. ம. இராமச்சந்திரன்
வெளியிடுபவர் சு. இராஜவேலு
முதல் பிரதி பெறுபவர்கள் மா. ரா. அரசு பரமநாதன் அர. அகிலா

10:40 பழங்கால ஓவியங்களின் பதிவாக்கமும் மீட்டுருவாக்கமும் - சிக்கல்களும் தீர்வுகளும் - கூ.இரா.சீனிவாசன் அறக்கட்டளைப் பொழிவு
அறிமுகம் இரா. கலைக்கோவன்
சொற்பொழிவு சே. கோகுல்

11:45 வாழ்த்துரை குடவாயில் பாலசுப்ரமணியன்

11:55 நன்றியுரை மு.நளினி


இந்த நிகழ்ச்சி நிரலையே அழைப்பிதழாக ஏற்று வருகை புரிந்து விழாவைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.

-ஆசிரியர் குழு.
http://www.varalaaru.com


Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.